உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்சுழி: திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் ஆடித் தபசு விழா நேற்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருமேனி நாதர், துணைமாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தது. கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. சுவாமிகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் சுவாமிகள் குதிரை, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளி, ரிஷப வாகனங்களில் வீதி உலா வருவர். ஜூலை 29ல் சுவாமிகள் குண்டாற்றில் எழுந்தருளி துணை மாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !