உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கவயல் சிவராஜ் நகரில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

தங்கவயல் சிவராஜ் நகரில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

தங்கவயல்: தங்கவயல் சிவராஜ்நகரின் வேளாங்கண்ணி மாதா சிற்றாலய 29ம் ஆண்டு தேர் திருவிழா வாண வேடிக்கைகளுடன் நடந்தது.

தங்கவயல் உரிகம் சிவராஜ் நகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா சிற்றாலய 29ம் ஆண்டு திருவிழாவையொட்டி 25ம் தேதி கொடியேற்றம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தேர் திருவிழா நடந்தது. மூன்று நாட்களும் ஜெபமாலை, பிரார்த்தனை, அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு, பேண்டு வாத்தியம் முழங்க தேர் பவனி நடந்தது. சிவராஜ் நகர், ஈ.டி., பிளாக் 2வது பிரிவு, எஸ்.டி., பிளாக் சதுக்கம், ஈ.டி.பிளாக்., சானிடரி போர்டு காலனி, சல்டானா சதுக்கம் ஆகிய இடங்களில் தேர் பவனிக்கு வரவேற்பு அளித்தனர். அதிர்வேட்டுகளும், வாணவேடிக்கைகளும் இடம் பெற்றன.

விழா ஏற்பாடுகளை சிற்றாலய தலைவர் தாடி அன்பழகன், வட்டார பஞ்சாயத்து தலைவர் ஞானசம்பத், மதர் தெரசா அறக்கட்டளை தலைவர் டி.அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !