உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பினாயூர் சந்தியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்

பினாயூர் சந்தியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்

உத்திரமேரூர்: பினாயூர், சந்தியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடந்தது.


உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் கிராமத்தில், பாலாற்றங்கரை மீது 500 ஆண்டுகள் பழமையான சந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்தாண்டிற்கான ஆடி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அப்போது அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக இரவு 10:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !