சகோதர சகோதரிகளே! பாசமலர் பூக்கட்டும்!
ADDED :5028 days ago
பல குடும்பங்களில் சகோதரர்களுக்குள் பேச்சு வார்த்தை கூட இல்லாமல் உள்ளது. ஆனால்,மனதுக்குள் பழைய நினைவுகள் அசை போடுகின்றன. மீண்டும் சேர்ந்து வாழ மாட்டோமா என்ற எண்ணம் இழையோடிக் கொண்டிருக்கிறது. சகோதர ஒற்றுமையைப் பேண, ராமர் பட்டாபிஷேக படத்தை பூஜை அறையில் வையுங்கள். புனர்பூச நட்சத்திரம் அல்லது சனிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி 108 அல்லது 1008 முறை ராம் என்றோ அல்லது ஸ்ரீராம ஜெயம் என்றோ பக்தியுடன் ஜெபியுங்கள். ராமர் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி மூன்றுமுறை சந்நிதியை வலம் வாருங்கள். ராம சகோதரர்களின் ஆசியோடு உங்கள் வீட்டிலும் பாசமலர் பூத்துக் குலுங்கும்.