பாதுகாப்பார் பைரவர்!
வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் கிளம்பப் பயப்படுவோர் பலர். அதிலும், வீட்டில் ஆள் இருக்கும்போதே பொருட்களை திருடி விடும் திருடர்கள் மலிந்து விட்ட காலம் இது. நியாயமான வழியில், கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வம், நம்மிடமே நிலைத்திருக்க அருள்புரிகிறார் காலபைரவர். இவரது வாகனம் நாய். நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பதுபோல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாகஇருப்பார்.
தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவருக்கு இணையாருமில்லை. தேய்பிறை அஷ்டமியன்று இவரை
வழிபடுவது சிறப்பாகும். வழிபாட்டின்போது, எலுமிச்சம் பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேக திரவியங்களை பைரவர் கோயிலுக்கு வாங்கிகொடுங்கள். தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுங்கள். பைரவரை முழுமையாக நம்பி நிம்மதியாக வெளியூர் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்கு பாதுகாவலராக பைரவர் இருப்பார்.