உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மந்திர புஷ்ப பூஜை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மந்திர புஷ்ப பூஜை

ஸ்ரீபெரும்புதுார்: ஆடி மாத முதல் செவ்வாய் கிழமையான நேற்று, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு மந்திர புஷ்ப பூஜை நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி – தெய்வானை யுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவில், ஆடி மாத முதல் செவ்வாய் கிழமையான நேற்று, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோ – பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள் மலர் அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி – தெய்வானை சமேத முருகனுக்கு பால் அபிஷேகத்தை தொடந்து, மந்திர புஷ்ப பூஜை எனும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !