திருமலையில் அக்டோபர் தரிசனம் முன்பதிவு 24ல் துவக்கம்
ADDED :23 hours ago
சென்னை; திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் அக்டோபர் மாத சேவைகள், தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, அங்கப்பிரதட்சண சேவைக்கான முன்பதிவு, நாளை காலை 10:00 மணிக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. அக்டோபர் மாத 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு, வரும் 24-ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அதே நாள் மாலை 3:00 மணிக்கு திருமலை, திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் துவங்குகிறது. திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலின், 200 ரூபாய் ஆகஸ்ட் மாத சிறப்பு தரிசன முன்பதிவும், 24-ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.