உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் இன்று, நாளை ஸ்ரீ சண்டி ஹோமம்

ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் இன்று, நாளை ஸ்ரீ சண்டி ஹோமம்

ராமசந்திரபுரம்: பிரம்மபுரம் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் இன்றும், நாளையும் 30ம் ஆண்டு ஸ்ரீ சண்டி ஹோமம் நடக்கிறது.

பெங்களூரு ராமசந்திரபுரம் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில், இன்றும், நாளையும் 30ம் ஆண்டு ஸ்ரீ சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.

முதல் நாளான இன்று, காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், எஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும்.

மாலையில் ஸ்ரீ துர்கா கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், சோம கும்ப பூஜை, ரக் ஷாபந்தனம், சோடஷ மாத்ருகா பூஜை, புஸ்தக பூஜை, நவாக் ஷரி ஜபம், ஸ்ரீ தேவி மஹாத்ம்ய நவசண்டி பாராயணம், வேதிகார்ச்சனை, நவாபரண பூஜை, அக்னிகார்யம், பூர்ணாஹூதி, சோடசோபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும்.

இரண்டாம் நாளான நாளை 24ம் தேதி காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், தேவி மஹாத்ம்ய பாராயணம், பிரம்மச்சாரி பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக வைரவ பூஜை, சவுபாக்ய திரவ்ய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கலச பிரதக் ஷிணை, கலச அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த ஹோமத்தில் பங்கேற்கும்படி கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் விபரங்களுக்கு 94484 32389 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !