உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத முக்கிய விசேஷ நாட்கள்

ஆடி மாத முக்கிய விசேஷ நாட்கள்

ஆடி வெள்ளிக்கிழமை: ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், திருவிளக்கு வழிபாடு, கூழ் ஊற்றுதல் ஆகியன நடக்கும்.


ஆடி அமாவாசை: ஆடி 27ம் தேதி (ஆக. 12ம் தேதி) முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கப்படும் புனித நாள்.


ஆடிப்பூரம்: ஆடி 29ம் தேதி (ஆக. 14ம் தேதி) அம்பாள் அவதரித்ததாகக் கருதப்படும் நாள்.

ஆடிப்பூர நாளில், அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, நம்முடைய வேண்டுதலை சொல்லி வழிபடலாம். திருமணம், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபடுவதால் அம்பிகையின் அருள் கிடைக்கும்.


ஆடித்தபசு: ஆடி 12ம் தேதி (ஜூலை 28ம் தேதி) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். குறிப்பாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி வெகு விமரிசையாக நடக்கும்.


ஆடிப்பெருக்கு : ஆடி 18-ம் தேதி (ஆக. 3ம் தேதி) நாள் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்புவதைக் கொண்டாடும் நா ளாகும். இது நீர் வளத்தையும் விவசாயத்தையும் போற்றும் இயற்கைத் திருவிழா.


தெய்வீக வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக இருந்தாலும், இந்த மாதத்தில் புதிய சுபகாரியங்கள் (திருமணம் போன்றவை) செய்வதைத் தவிர்த்து, இறையருளில் கவனம் செலுத்துவது நமது மரபாக தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !