கால பயம் போக்கும் திருவாலங்காடு காளி
ஐம்பத்தி ஒன்று சக்தி பீடங்களில் காளி பீட மாக போற்றப்படும் திரு வாலங்காடு. இங்குள்ள காளி, சிவபெருமானின் நடனப் போட்டியில் வெட்கி தலைகுனிந்த வள் என்பதால் தனிச்சி றப்பு. சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை அழிக்க பார்வதி தேவி தன் நெற்றிக் கண்ணில் இருந்து காளியை தோற்றுவித்தாள்.
அரக்கர்களை அழித்த பிறகு, காளி உக்கிர வடி வத்துடன் ஊரை அச் சுறுத்தினாள். அவளை அமைதிப்படுத்த சிவபெ ருமான் திருவாலங்காடு வந்து, ஊர்த்துவ தாண் டவம் ஆடினார். அந்த ஆட்டத்துக்கு எதிர் வினை ஆற்ற முடியா மல் காளி தோல்வியை ஒப்புக்கொண்டாள். என்றாலும் சிவன், இத்தலத்தில் என்னை தரிசிக்க வருபவர்கள் முதலில் உன்னை தரி சிக்க வேண்டும் என்று வரமளித்தார்.
பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக, எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களை மடக்கி பாதங்களை தரையில் ஊன்றி நடனமாடும் நிலையில் அருள்பாலிக் கிறாள். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் சிவனின் பஞ்ச சபைகளில் முதல் சபை யான `ரத்தின சபை.
அவர் இங்கு வடாரண் யேஸ்வரராக காட்சி தரு கிறார். காரைக்கால் அம் மையாருக்கு ஆனந்த தாண்டவத்தை காட்டி முக்தி அளித்த ஸ்தலம்.
கோவில் முகவரி: பத்ரகாளி அம்மன் திருக்கோயில், பெரிய தெரு, திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் -631210.
போன்: 044 27872074
நேரம்: காலை 6.00-இரவு 8.00 மணி வரை.
செல்லும் வழி: சென் னைக்கு மேற்கே 80 கி.மீ. திருவள்ளூரிலிருந்து 20 கி.மீ. சென்னையில் இருந்து ரயிலில் திருவா லங்காடு சென்றால், ஷேர் ஆட்டோவில் கோவிலை அடையலாம்.