உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மக்களை காக்கும்... மதுரை மீனாட்சி

மக்களை காக்கும்... மதுரை மீனாட்சி

அம்பிகையின் 51 சக்தி சக்தி பீடங்களில் ‘மீனாட்சி (சுமங்கலி) சக்தி பீடமாக திகழ்கிறது. மீனாட்சி அம்மன் ‘அங்கயற் கண்ணி (மீன் போன்ற கண்களை உடையவள்) என்று அழைக்கப்படுகிறார்.

பிறந்தபோதே 3 தனங்கள் (மார்பகங் கள்) கொண்டிருந்தார். சிவனை மணக்கும் போது மூன்றாவது மறைந்துவிடும் என்று அசரீரி கூறியபடி, சிவனை மணந்தவுடன் மறைந்தது.

சக்தி பீடங்களில் இத்தலம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, கருவறையில் அம்மனின் இடப்புறத்தில் இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

மதுரையின் அரசி

மீனாட்சி அம்மன் மதுரையின் அரசியாக வணங்கப்படுகிறார். இன்றும் மதுரை மீனாட்சிக்கு தினமும் பூஜை செய்த பிறகே, சுந்தரேஸ்வரருக்கு பூஜை நடக்கிறது. 18 சித்தர் களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாக இத்தல இத்தலம் திகழ்கிறது. போகத்தையும் முக்தியையும் ஒருசேர வேண்டுபவர்களுக்கு சித்தி தரும் தலமாக திருவிளையாடல் புராணத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது. நகரமே அதை சுற்றி தான் உருவானது. 7ம் நூற்றாண்டு தேவார பாடல்களிலேயே இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பச்சை புடவை அணிந்து, வலது கையில் கிளியை ஏந்தியிருக்கும் மீனாட்சி தேவியை எளிதில் அடையாளம் காணலாம்.

கோவில் முகவரி: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், சித்திரை வீதி, மதுரை -625 001.
போன்: 0452 -2344360.
நேரம்: காலை 5.00 -மதியம் 12:30 மற்றும் மாலை 4.00 - இரவு 9:30 .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !