உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத விழாக்களும் அதன் சிறப்புகளும்

ஆடி மாத விழாக்களும் அதன் சிறப்புகளும்

* ஆடி மாதத்தில் உலகம் முழுதும் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

* ஆடிமாதம் இறை வழிபாட்டிற்கான மாதமாக சொல்லப்படுகிறது.

* உலகம் முழுதும் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

* பெண் மாதமான ஆடி மாதத்தை கற்கடக மாதம் என்றும் கூறுவார்கள். பண்டிகைகளின் துவக்கம், ஆடி மாதத்தை கணக்கிட்டு தான் கூறப்படுகிறது.

* ஆடி மாதம் பிறந்தது முதல் மார்கழி வரை தட்சணாயன புண்ணிய காலமாகும். இக்காலங்களில் புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும்.

* ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

* ஆடி மாதத்தில் வரும் அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி கடமைகளை செய்தால் ஆண்டு முழுதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

* ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்துார் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருளச் செய்து திருப்பாவை, பாசுரங்கள் பாடப்படும். அப்போது ஆண்டாளை வழிபட்டால் நம் பிரார்த்தனைகள், மாங்கல்ய பாக்கியம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !