வேண்டவராசி அம்மன் ஆடிப்பெருவிழா
நெல்லிக்குப்பம் அன்னை வேண்ட வராசி அம்மன் கோவில், 66 வது ஆண்டு ஆடிப்பெருவிழா வரும் 27 ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது.
விழாவின் ஆரம்பமாக, 26 ம் தேதி, மாலை 6:00 மணிக்கு 108 சங்கு அலங்காரம், முதற்கால பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து, 27 ம் தேதி, காலை 4:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஹோமம், இரண்டாம் கால பூஜை நடைபெறுகிறது. 6:00 மணிக்க அம்மனுக்கு 108 சங்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். திருக்கோவிலின் திருக்குளத்திலிருந்து 308 பால்குடம் மற்றும் கங்கா தீர்த்தம் புறப்பட்டு உற்சவ மூர்த்திக்கு, சிறப்பு மஹா அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
பிற்பகல் 1:00 மணிக்கு, கூட்டு வழிபாடு, கூழ்வார்த்தல் விழா நடைபெறுகிறது.
மாலை 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும், கோவில்வலம் வருதலும் நடைபெறுகிறது. பின், திருக்குள மண்டபத்திற்கு புறப்பட்டு அங்கு, சிறப்பு ஆராதனை நடைபெறும். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் வானவேடிக்கையுடன் அம்மனின் திருவீதி உலா நடைபெறும்.
அதேபோல், மூன்றாம் வராம் ஆக., 3 ம்தேதி, நான்காம் வாரம் 10ம் தேதி, ஐந்தாம் வாரம் 17 ம் தேதி, ஆறாம் வாரம் 24 ம் தேதி, ஏழாம் வாரம் 31ம் தேதிகளில் தொடர்ந்து ஆடித்திருவிழா நடைபெற உள்ளது.
ஸ்லோகம்:
ஓங்காரி! ஒளிவீசும் மாணிக்க முடியணி உயர் அரசி வேத சக்தி ஓதரிய கலைதரும் உத்தமி நாரணி ! உன் பாதம் பணிந்தவர்க்கு நீங்காத செல்வமும், கல்வியும், ஞானமும், நீடூழி வாழ் ஆயுளும் நெறி மனமும் நிலையுணர்வும் நன்மக்கட்பேறுடன் நித்ய சாம்ராஜ்ய வாழ்வும், ரீங்காரி! நினதுதிரு வருட்காட்சியும் பெற்று என்றென்றும் போற்றும் பேறும் எய்தியே வாழுவர் என்ற மறையுண்மையும் எப்போதும் நிலைக்குமன்றோ! ஆங்காளி ஆங்காரம் கொண்டவரை யடக்கியருள் அன்னையே ஆதி சக்தி அணிவயல் சூழ்நெல்லிக்குப்பம் வாழ் தேவியே ஆதி வேண்டவராசி.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் கிராமத்தில், புகழ்பெற்ற அம்மன் கோவிலாக அன்னை வேண்ட வராசி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
இந்த விழாவின், முதல் வார விழா, கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவில், அன்னை வேண்டவராசி அம்மனுக்கும், நெல்லியம்மனுக்கும் முறையே சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ அலங்காரமும், தீப தூப ஆராதனைகளுடன் நடைபெற்றது.
அதேபோல், பிரதான விழாவாக, இரண்டாவது வாரம் வரும் 26ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்னை வேண்டவராசி அம்மனின் 67 வது ஆண்டு ஆடிப்பெருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
விழாவின் ஆரம்பமாக, நாளை மாலை 6:00 மணிக்கு 108 சங்கு அலங்காரம், ஹோமம், முதற்கால பூஜை நடைபெறுகிறது. இரவு 9:00 மணியளவில், ஹோமம், பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, 2ம் தேதி, ஆடித்திருவிழா காலை 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் தொடங்குகிறது. காலை 5:00 மணிக்கு ஹோமமுடன், இரண்டாம் கால மஹா பூஜை, பூர்ணாஹுதி நடைபெறுகிறது.
காலை 6:00 மணிக்கு, அன்னை வேண்டவராசி மூலவருக்கு 108 சங்கு அபிஷேகமும், 7:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும்.
காலை, 9:00 மணியளவில், திருக்கோவிலின் திருக்குளத்திலிருந்து 308 பால்குடம் மற்றும் கங்கா தீர்த்தம் புறப்படுகிறது.
காலை 10:00 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு, சிறப்பு மஹா அபிஷேகமும், அதை தொடர்ந்து விசேஷ அலங்காரமும், தீப துாப ஆராதனையும் நடைபெறும்.
பிற்பகல் 1:00 மணிக்கு, கூட்டு வழிபாடு மற்றும் கூழ்வார்த்தல் விழா நடைபெறுகிறது.
மாலை 5:00 மணிக்கு, சர்வாலங்கார பூஷணியாக அன்னை வேண்டவராசிக்கு ஊஞ்சல் சேவையும், கோவில் வலம் வருதல் மற்றும் தீபாராதனையும் நடைபெறும்.
மாலை 6:00 மணிக்கு அன்னை திருக்குள மண்டபத்திற்கு புறப்படுவார். பின், மண்டபத்தில் சிறப்பு ஆராதனை நடைபெறும். இதனை தொடர்ந்து விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் வானவேடிக்கையுடன் அன்னை வேண்டவராசி அம்மனின் திருவீதி உலா நடைபெறும்.
விழாவை முன்னிட்டு, முன்னதாக காலை 10:00 மணியிலிருந்து அன்னதானம் வழங்கப்படும். பகல் 12:00 மணிக்கு, நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை பாராட்டி கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதேபோல், மூன்றாம் வாரம் ஆக.,2ம் தேதி, நான்காம் வாரம் 9ம் தேதி, ஐந்தாம் வாரம் 16 ம் தேதி, ஆறாம் வாரம் 23ம் தேதி, ஏழாம் வாரம் 30ம் தேதிகளில் தொடர்ந்து ஆடித்திருவிழா நடைபெற உள்ளது.