உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி பெருமாள் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, இன்று காலை 9:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை 9:30 மணியளவில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். முன்னதாக பிரகாரத்தில் பசுவுக்கு கோ பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !