காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடி சுக்ல பட்ச ஏகாதசி வைபவம்
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம். நெய் தேன், பால் ,தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது . பின்னர் ரங்கநாதர் பட்டுஉடுத்தி வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமறை மகாதீப ஆராதனை நடந்தது. வைபவத்தில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் , திருமலை நல்லாான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள், மிராசு தாரர்கள் திருக்கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.