உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை; சதுரகிரியில் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

ஆடி அமாவாசை; சதுரகிரியில் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

வத்திராயிருப்பு: ஜூலை 26–: தாணிப்பாறை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கலெக்டர் சுகபுத்ரா, மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு பணிகள், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தல், குடிநீர், சுகாதாரம் வசதிகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத வகையில் முன்னேற்பாடு பணிகள், எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை, மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. சிறப்பு பஸ்கள், வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ரவி மீனா, சப்-கலெக்டர் முகமது இர்பான் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !