உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ செம்பியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா

ஸ்ரீ செம்பியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா

அவிநாசி: அவிநாசி அருகே செம்பியநல்லுாரிலுள்ள ஸ்ரீ செம்பியம்மன் மாதேவி கோவிலில் 23ஆம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா நடக்கிறது.

இன்று காலை கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கொடி கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து நாளை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, அணி கூடை நகை அழைத்து வருதல், பொங்கல் வைத்து குண்டம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளும், 28ம் தேதி அம்மை அழைத்தல், கரகம், அணி கூடை, பம்பை வாத்தியம் ஆகியவற்றுடன் சிம்ம வாகனத்தில் செம்பிய மாதேவி அம்மன் ஊர்வலமாக கோவில் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் முளைப்பாலிகை எடுத்து வருதல், 29ம் தேதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு, மறுபூஜை ஆகியவற்றுடன் ஆடிக்குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !