கடவுள் பெயரை சொல்ல சொல்கிறார் ஆதிசங்கரர்
* கடவுள் பெயரை சொல். பிரச்னை தீரும்.
* கடவுளை வணங்கு. அது தான் வாழ்க்கை.
* தாமரை இலை நீர் போல வாழ்க்கை நிலையற்றது.
* பிறருக்கு உதவி செய். உன் மதிப்பு உயரும்.
* சம்பாதிக்கும் வரையே பலரும் உன்னைச் சுற்றுவர்.
* ‘நான் யார்? எங்கிருந்து வந்தேன்?’ என நீயே கேட்டுக் கொள்.
* மோட்சம் கிடைக்க மகான்களின் ஆசி வேண்டும்.
* கோடை, குளிர் என காலம் மாறினாலும் ஆசை குறைவதில்லை.
* என்னால் தான் முடியும் என ஆணவம் கொள்ளாதே.
* என்றும் ஓயாதது மனக் குழப்பம்.
* வேதமும், சாஸ்திரமும் மனதை அடக்கும் வழியை சொல்கின்றன.
* ஆசை அதிகரித்தால் துன்பம் அதிகரிக்கும்.
* துாரத்தில் தெரியும் கானல்நீர் போன்றது இன்பம்.
* தெரிந்தே தீமை செய்பவன் கண் இருந்தும் பார்வை இல்லாதவனே.
* நல்லதை கேட்க விரும்பாதவன் காது இருந்தும் பயன் இல்லாதவன்.
* கருமித்தனம் நல்ல பண்புகளை அழித்து விடும்.
* வறுமையும், செல்வமும் விருந்தினர் போல நம்மிடம் வந்து செல்பவை.