உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயில் குருபிரதோஷம் விழா

எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயில் குருபிரதோஷம் விழா

எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமதே எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் குருபிரதோஷம் விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் எட்டீஸ்வரர் மூர்த்தி கோயிலில் மகா கணபதி பூஜையுடன் குருபிரதோஷம் துவங்கியது.உலக நலன் வேண்டி மகாசங்கல்பம் நடந்தது.புண்ணியாவாஜனம், கலச ஆவாகனபூஜை, பஞ்சசுத்த ஜெபம், பாராயணம், ருத்திரசுத்த ஹோமம், திரவியகுதி, பூர்ணாகுதி நடந்தது. சுவாமி நந்தீஸ்வரர் அதிகார நந்தி பகவானுக்கும் 21 வகைகயான அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு புஷ்ப அலங்காரம் நடந்தது. நந்தீஸ்வரர் பகவானுக்கு அருகம்புல் மாலைசாத்தி நெய்தீபம் ஏற்றி வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோமசூத்ர பிரதட்சண வழிபாடு செய்தனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரண்டாம் சுற்றில் ஆனந்த தாண்டவ நடராஜர் சன்னதி முன்பு சுவாமி அம்பாளுக்கு பன்னீர் அபிஷேகம் சிறப்பு போட்டாச்சர உபச்சார தாண்டவ தீபாரதனை நடந்தது. ஆரோக்கியம், ஆயுள் ஆனந்தம் வேண்டி பக்தர்கள் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். காண்டாமணி யோசை சங்குநாதம் மங்கள இசை முழங்கசுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் ஏககால சிறப்பு பூஜை நடந்தது. பட்டத்து விநாயகர் கோயில் ஸ்தாணிகம் சர்வஜாதகம் சிவாச்சாரியர் பரசுராம சுப்பிரமணியன் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை சமஸ்தானம் மேனேஜர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !