உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையில் நீராடு பாவம் தொலையும்: சாரதாதேவி

கங்கையில் நீராடு பாவம் தொலையும்: சாரதாதேவி

* கங்கையில் நீராடுங்கள். பாவம் தொலையும்.
* ஒருவர் செய்த நல்லது, கெட்டது மட்டுமே கடைசி வரை கூட வரும்.
* தொடர்ந்து ஒரே மந்திரத்தை ஜபித்திடு. அந்த மந்திரம் சித்தியாகும்.
* குருவின் உபதேசத்தை பின்பற்று; பேராசை அழியும்.
* வேண்டுதல் இல்லாமல் கடவுளை வழிபடுவதை ‘நிஷ்காம்ய பக்தி’ என்பர்.  
* இறப்பு என்பது துாக்கம். பிறப்பு என்பது துாக்கத்தில் இருந்து விழிப்பது போலாகும்.  
* இன்பமும், துன்பமும் கலந்தது தான் மனித வாழ்க்கை.  
* மனதில் ஆசை இருக்கும் வரை பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* முன் செய்த வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறோம்.  
* மனம் துாய்மையானால் வாழ்வு லேசாகும்.
* கங்கை கரையில் வசிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
* நீ எதை மதிக்கிறாயோ அதுதான் உன்னையும் மதிக்கும்.
* மலர்களை கடவுளுக்கு சூட்ட வேண்டும். இல்லாவிட்டால் மரத்திலேயே இருக்கட்டும்.
* உன் கடமையை செய். அப்போதுதான் வினைகள் தீரும்.
* நல்ல மனம் கொண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகவே காண்பான்.
* ஞானம் பெற்றவர்கள் தர்க்கம் செய்ய விரும்புவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !