கோயிலுக்கு செல்; மனம் குளிரும்: வள்ளலார்
* தினமும் கோயிலுக்கு செல்; கடவுளை வழிபட்டால் மனம் குளிரும்.
* நல்லவர்களுடன் விரும்பி நட்பு கொள்.
* நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையை பாதுகாக்கும்.
* உண்மையை பேசு. உன் வாக்கிற்கு மதிப்பு இருக்கும்.
* பிறருடைய பசியை போக்குவதே ஜீவகாருண்யம்.
* கடவுளை தாழ்த்தியும், மனிதனை உயர்த்தியும் பேசாதே.
* மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியே ஒன்று பேசாதே.
* பகட்டாக ஆடை அணிவது ஆன்மிகத்திற்கு புறம்பானது.
* பெற்றோரே நமக்கு முதல் தெய்வம்.
* தன்னை அறிந்து வாழ்வதே உயர்ந்த இன்பம்.
* கோபம் வருதா... அமைதியாக இரு.
* குறை இல்லாத புகழ் கொண்டவர் கடவுள் ஒருவரே.
* கடவுளுக்கு நன்றி உள்ளவனாக இரு.
* கடவுளின் புகழ் பாடினால் புண்ணியம் சேரும்.
* உலகம் நலம் பெற தினமும் வழிபாடு செய்.
* நல்ல நண்பர்களை ஒருபோதும் பிரிக்காதே.
* ஆசை காட்டி மோசம் செய்வது பாவம்.
* உதவும் மனம் கொண்டவனே உண்மையான மனிதன்.
* நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.