உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தீர்த்தவாரி நிகழ்ச்சி

வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தீர்த்தவாரி நிகழ்ச்சி

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்த வாரி நிகழ்ச்சி அலங்கார குளத்தில் நடைபெற்றது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் கடந்த 21ஆம் தேதி ஆடி பிரம்மோற்சவ விழா கொடிகற்றத்துடன் துவங்கியது இதனைத் தொடர்ந்து தினம்தோறும் வீர அழகர் சர்வ அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களில் மண்டகப் பணிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 26 ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை ஆடித் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை பட்டத்தரசி கிராம மக்கள் தீர்த்தவாரி மண்டகப்படிக்கு வீர அழகரை அழைத்து வருவதற்காக மேள தாளங்களுடன் தேங்காய் பழ தட்டுகளுடன் கோயிலுக்கு சென்று வரவேற்றனர். பின்னர் வீர அழகர் கோயிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து பட்டத்தரசி கிராமத்திற்கு எழுந்தருளினார்.மாலை சக்கரத்தாழ்வாருக்கு தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் வீர அழகருக்கு அபிஷேக,ஆராதனைகள்,தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் வீதி உலா நடந்தது. நாளை உற்சவ சாந்தியுடன் இந்த வருடத்திற்கான ஆடி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !