உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமண வரமருளும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)

திருமண வரமருளும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)

சக்தி பீட வரிசையில் திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில் இச்சா சக்தி பீடமாகும். தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253வது தலம்.

பிரளயத்தில் உலகம் அழிவுற்று, புதிய உலகம் தோற்றுவிக்கப்படும். அப்போது பிரம்மதேவர் உயிர்களை படைப்பார். ஒரு பிரளய காலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மன் விரும்பவில்லை. சிவனை வேண்டி தவம் புரிந்தார். யாகத்தின் சிந்தார் இடையே அக்னி வடிவில் தோன் றிய சிவபெருமான், உலகம் அழியாமல் தடுக்க சம்மதிக்கிறார். அதற்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோவிலாக உருவானது. பழமையான இக்கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு.

மூலவராக:

சுயம்பு மூர்த்தியாகிய ஆதிபுரீஸ்வரர் (புற்றிடங்கொண் டார், படம்பக்கநாதர்) அருள்பாலிக்கிறார். அன்னை திரிபுரசுந்தரி (வடிவுடையம்மன்). இவரை தரிசித்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம் மற்றும் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். சுந்தரருக்கு தமிழ் மொழியை உபதேசித்து, எழுத்தறியும் பெருமாள் என சிவன் பெயர் பெற்ற தலம். சப்த விடங்க தலங்களில் ஒன்றான இங்கு தியாகராஜர் ஆனந்த தியாகேஸ்வரராக அருள் பாலிக்கிறார். தல விருட்சமாக, மகிழ மரம் மற்றும் அத்தி மரம் உள்ளது.

முகவரி:
தியாகராசர் சுவாமி திருக்கோவில்,
திருவொற்றியூர், சென்னை.
போன்: 044 25733703, 9444479057.
சென்னையின் பல பகுதிகளில் இருந்து திருவொற்றியூருக்கு பஸ் வசதி உண்டு. மெட்ரோ ரயிலிலும் செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !