உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சக்தி மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா துவக்கம்

 சக்தி மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா துவக்கம்

 கமுதி: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற உள்ளது.


சிறப்பு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம்,கோமாதா பூஜை, பூரணாஹுதி தீபாராதனை நடந்தது. சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடியை கிராம மக்கள் முக்கிய விதியில் ஊர்வலமாக எடுத்து கோயிலுக்கு வந்தனர். மூலவரான சக்தி மாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கருங்குளம் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !