சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்
பாகூர்: சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில், செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது.
பாகூர் அடுத்த சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடித்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு காமதேனு, சிங்கம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு, அ ம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் செடல் அணிந்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த, தேரோட்டத்தை அமைச்சர் ராஜவேலு, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.