உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுாரில் அம்மனுக்கு வளைகாப்பு

அலங்காநல்லுாரில் அம்மனுக்கு வளைகாப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கேட்கடையில் வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் நேற்று காலை அம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்கள், வளையல்கள் அணிவிக்கப்பட்டு வளைகாப்பு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வில்லாபுரம் காளியம்மன் கலைக் குழுவினர் விளக்கு பூஜை நடத்தினர்.

வளையல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தி பாடல்கள் பாடி உலக நன்மை வேண்டி கூட்டு வழிபாடு நடத்தினர். அர்ச்சகர் குபேந்திரன் சிறப்பு பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை நிர்வாகி தனம் அம்மாள் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !