உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

போடி ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

போடி: போடி ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்த சபை சார்பில் நடந்த நிறை புத்தரசி பூஜையை முன்னிட்டு நெற்கதிர் அலங் காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சபை குருநாதர் மாரிமுத்து தலைமை வகித்தார். தலைவர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலு, துணைத் தலைவர்கள் முத்துச் சாமி, பிரபு, துணைச் செயலாளர்கள் லட்சுமி நாராயணன், முனியப்பன் முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கிரி செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர், அன்னதானம் வழங்கப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !