உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா; முளைப்பாரி எடுத்து வழிபாடு

முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா; முளைப்பாரி எடுத்து வழிபாடு

தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி தெற்குத் தெரு முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. நேற்று பகலில் பால்குடம் வேல் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மக்கள் முளைப்பாரி எடுத்து வந்து பூஜைகள் நடந்தன.


தேவகோட்டை அழகாபுரி மேலத்தெரு செல்வ முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா கடந்த வாரம் முளைக்கொட்டு விழா தொடங்கியது. ஒரு வாரம் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். இரவில் முளைப்பாரி, முளைக்கொட்டு நிகழ்ச்சி நடந்தன. தேவகோட்டை ஆவரங்காடு முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். பாலாபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்க பெற்று பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !