ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் ஆடி முளைக்கொட்டு உற்ஸவம்
ADDED :28 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மொட்டையன்வலசை கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது.
ஜூலை 30ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் கூட்டு வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் (ஆக.,5ல்) அய்யனார் கோயிலில் இருந்து பூஜாரி கணேசன் தலைமையில் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து முத்து மாரி அம்மன் கோயிலில் இறக்கி வைத்தனர். நேற்று மாலையில் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அய்யன் கோயில் அருகே பாரிகள் கரைக்கப்பட்டது. இதே போன்று அழகன்குளம் பாவடி தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு உற்ஸவ விழாவில் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.