உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்டரீபுரம் பஜே பாண்டுரங்கம் பஜனோத்ஸவம்; ஆக. 13ல் ஐயப்பன் பூஜா சங்கத்தில் துவங்குகிறது

பண்டரீபுரம் பஜே பாண்டுரங்கம் பஜனோத்ஸவம்; ஆக. 13ல் ஐயப்பன் பூஜா சங்கத்தில் துவங்குகிறது

ராம்நகர்: கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் ஒன்றே கதி என்பதை பக்தர்களுக்கு உணர்த்த அவதாரம் செய்தவர் ஸ்ரீ பாண்டுரங்கன்.


மகாராஷ்டிராவின் பண்டரீபுரத்தில் உள்ளதை போன்று ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஐயப்ப பூஜா சங்கத்தில் ருக்மிணி சமேத பாண்டுரங்கன் விக்ரஹம் ஸ்தாபித்து, பண்டரீபுரத்தில் பூஜை செய்யும் பூஜகர்களால் அங்குள்ளதை போன்றே காகட ஆரத்தி, போக் ஆரத்தி, சயன ஆரத்தி, துளசி அர்ச்சனை ஆகியவற்றை நடத்துகின்றனர்.


இந்த ஆராதனைகளுடன் பாகவதோத்தமர்களின் நாமசங்கீர்த்தன வைபவமும் ராம்நகரில் 4 நாட்கள் நடக்கிறது. பண்டரீபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விஷ்ணுவின் அவதாரமான விட்டல்லா என்கிற பாண்டுரங்கனை ருக்மிணியுடன் இங்கே தரிசிக்கலாம். ஆக.13 வியாழன் காலை 9 முதல் 1 மணி வரை ராம்நகர் பஜனை கோஷ்டியினரின் அஷ்டபதி மஹாகாவ்யம் நடக்கிறது. பிற்பகல் 3.30 முதல் மாலை 5:30 வரை மைதிலி ராமநாதன் குழுவினரின் நாராயணீயம், 6 மணிக்கு ஆயக்குடி குமார் பாகவதர் குழுவினரின் திவ்யநாமம் டோலோத்ஸவம் நடக்கிறது. ஆக.14 வெள்ளி காலை 9 மணிக்கு செங்கோட்டை ஹரிஹர சுப்ரமணிய பாகவதர் குழுவினரின் அஷ்டபதி மஹாகாவ்யம் 13 முதல் 24 வரையும், 3:30 மணிக்கு குமாரி காம்யாஸ்ரீ பரஸ்ராம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், 6 மணிக்கு தானே ஸ்ரீனிவாசன் குழுவினரின் அபங்க திவ்ய நாம பஜனை நடக்கிறது.


ஆக.15 சனி காலை 9 மணிக்கு, ஈரோடு பாலாஜி பாகவதர் குழுவினரின் பாண்டுரங்க பக்தசரித்திரம் உபன்யாசமும், 4 மணிக்கு பிரேம்குமார் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், 6:30 மணிக்கு கடையநல்லுார் ஸ்ரீ ராஜகோபால் பாகவதர் குழுவினர் அபங்க திவ்யநாம பஜனை நடக்கிறது. ஆக.16 ஞாயிறு காலை 9 மணிக்கு சுந்தர்பாகவதர் குழுவினரின் ஸ்ரீ ருக்மிணிகல்யாண மஹோத்ஸவம், 3 மணிக்கு ஸ்ரீநாத்மஹாராஜ் குழுவினரின் அபங்க நாமசங்கீர்த்தனம், 6 மணிக்கு ஸ்ரீ கவுதம் கண்ணன் குழுவினரின் வசந்தோற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. பண்டரீபுரம் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஜய் பாண்டுரங்க பாதேவ மஹாராஜ், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஆரத்தி காட்டுகிறார், என ஸ்ரீ நாம சங்கீர்த்தனா டிரஸ்ட் நிர்வாகி கிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !