சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ADDED :17 hours ago
அன்னூர்: சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
சித்தர்கள் வழிபாடு செய்த, வாரணாபுரம் என்று அழைக்கப்படும் சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு, பழனி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். எல்லப்பாளையம், பழனி ஆண்டவர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.