திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் அம்மன் வீதி உலா
ADDED :20 hours ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சிநேகவல்லி அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா நடந்தது. நான்கு தெருக்களிலும் பெண்கள் கோலமிட்டு அம்மனை வரவேற்று வணங்கினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.