உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.


திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க இரண்டு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பெரியபாளையம் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு நேற்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், ஆரணி, கன்னிகைப்பேர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !