உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்

கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.


திருவிழா கடந்த 1ம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது . தொடர்ந்து, பகவான் பிறப்பு, ஆதிலட்சுமி பிறப்பு , பால் குடம் எடுத்தல், காத்தவராயன் பிறப்பு, ஆரியமாலா பிறப்பு, ஊரணி பொங் கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தினமும் மகாபாரத சொற்பொழிவு, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காத்தவராயன் – ஆரியமாலா திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து காளி கோட்டை இடித்தலுக்குப்பின், செண்டை மேளம் முழங்க, மங்கல வாத்தி யங் களுடன் உற்சவர் மாரியம்மன் தேரில் எழுந்தருளச்செய்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !