உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபுளியடி கருப்பராயன் கோவில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு

ஸ்ரீபுளியடி கருப்பராயன் கோவில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு

அவிநாசி: அவிநாசி அருகே காசிக்கவுண்டன்புதுாரில் உள்ள ஸ்ரீ புளியடி கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில், நேற்று மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 7-ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் தொடங்கிய விழாவைத் தொடர்ந்து பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காந்திபுரம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக புளியடி கருப்பராயன் கோவிலை வந்தடைந்தனர். சுவாமிக்கு கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவு நாளான இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !