தினமும் ஒரு அம்மன்: சொத்து பிரச்னை தீர செல்லாண்டியம்மனை தரிசிப்போம்
சொத்து பிரச்னையா... தீர்வு கிடைக்க கரூர் மாவட்டம் மாயனுார் செல்லாண்டியம்மனை தரிசிப்போம்.
மன்னர்களான சேர, சோழ, பாண்டியர் இடையே எல்லைப் பிரச்னை வந்தது. அப்போது மாயனுார் செல்லாண்டியம்மன் காட்சியளித்து தீர்ப்பு சொன்னாள். கொங்கு நாட்டு மக்களின் காவல் தெய்வம் இவள்.
சொத்து பிரச்னை உள்ளவர்கள் செவ்வாய் கிழமை அம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தினால் தீர்வு கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்க தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களில் அம்மன் சன்னதியில் மரத்தொட்டில் கட்டுகின்றனர். துர்கை, கருப்பண்ண சாமி, மதுரை வீரனுக்கு சன்னதிகள் உள்ளன. ஆடிப்பெருக்கு அன்று முளைப்பாரி சுமந்து வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
இங்குள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர், முனிவர்கள், சிவனடியாரான சுந்தரர் சிற்பங்கள் கலைநயம் மிக்கவை.
எப்படி செல்வது: கரூரில் இருந்து 22 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 81483 77367