உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் விழா

தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் விழா

சின்னமனூர் : சின்னமனூர் தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் விழா,பன்னிரு திருமுறை பெருவிழா நடந்தது. சின்னமனூரில் தெய்வீகப் பேரவை சார்பில் சைவ குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும், 63 நாயன்மார்களையும் வழிபாடு, தெய்வீகப் பேரவை வெள்ளி விழா என நால்வர் விழாகொண்டாடப்பட்டது.

முதல் நாளில் நால்வருக்கும் அபிஷேக ஆராதனை, சுவாமி புறப்பாடும் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் குமரேசன் துவக்கி வைத்தார். 63 நாயன்மார்கள் வரலாறு பற்றி பேராசிரியர் பாண்டியன் பேசினார். அதன் பின் நால்வர் திருவீதி உலாவை நகராட்சி தலைவர் அய்யம்மாள் துவக்கி வைத்தார். 2ம் நாளில் மழை வேண்டி திருமுறை ஒதுதல் நடந்தது. கொடியை சுவாமி முக்தானந்த மகராஜ் ஏற்றினார். பின் சைவத் தொண்டில் காரைக்கால் அம்மையார் பற்றி பேராசிரியர் விமலா, மங்கையர்கரசியார் பற்றி திலகவதி, பேராசிரியர் ராதா ஆகியோர் பேசினர். இதழ் ஆசிரியர் ஆடலரசு, திருவாசக ஞான மழை தலைப்பில் சிவக்குமார் பேசினார்கள்.

நிறைவு நாளில் குன்றக்குடி பொன்னம்பல அடி கள், பெருங்குளம் ஆதினம் சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சாரியார், தர்மபுரம் கட்டளை தம்பிரான் திருஞான சம்பந்த சுவாமி, ராமேஸ்வரம் ராம கிருஷ்ண மடத் தலைவர் சுவாமி நித்யானந்த் மகராஜ், தேனி வேத புரி சுவாமி பூர்ணானந்தா, சிறுமலை ஞான சிவானந்தா சுவாமிகள் பேசினர். அன்னதான நிகழ்ச்சியை எஜமான் பாண்டி முனீஸ்வரர் துவக்கி வைத்தனர். வெள்ளி விழா பற்றி கோவை அரண் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராசன் பேசினார். ஏற்பாடுகளை தெய்வீக பேரவை தலைவர் ஜெயராமன், அமைப்பாளர் குருசாமி, பொருளாளர் மனோகரன், துணை தலைவர்கள் இளஞ்செழியன், சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !