உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லாபுரம் கருப்பசாமி கோவிலில் ஆடி திருவிளக்கு பூஜை

மல்லாபுரம் கருப்பசாமி கோவிலில் ஆடி திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை; மல்லாபுரம் கருப்பசாமி கோவிலில் ஆடி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.  திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகில் உள்ள மல்லாபுரம் கருப்புசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு திருவிளக்கு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. இதனை முன்னதாக நேற்று காலை மூலிகை வாசனை திரவிய பொடிகள், சந்தனம், பன்னீர், பால், தயிர்,  பஞ்சாமிர்தம், தேன், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை  காண்பிக்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் நடந்த திருவிளக்கு பூஜையை கோவில் நிர்வாகி கோபிநாதன் சுவாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அம்பாளுக்கு 108 தமிழ் அர்சனை, தேவாரம், அபிராமி அந்தாதி, திருப்புகழ் பாராயணமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்புவின் சோ கோ நிருவனம் சார்பில் மஞ்சள், தாலிகயறு, குங்குமம், பழங்கள் அடங்கிய மங்கல பொருட்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜைகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல நிர்வாகி சீர்காழி செந்தில்குமார் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்திருந்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !