/
கோயில்கள் செய்திகள் / இன்று ஆடி 4ம் செவ்வாய், மாத சிவராத்திரி; சிவன் பார்வதியை வழிபட குடும்ப மகிழ்ச்சி பெருகும்!
இன்று ஆடி 4ம் செவ்வாய், மாத சிவராத்திரி; சிவன் பார்வதியை வழிபட குடும்ப மகிழ்ச்சி பெருகும்!
ADDED :4 minutes ago
ஆடி செவ்வாய்க்கிழமையும் மாத சிவராத்திரியும் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி செவ்வாய் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாளாகும். இன்று பெண்கள் வீட்டில் விளக்கேற்றி அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று சிவ , சக்தி தரிசனம் செய்வோம்.. சிறந்த பலனை பெறுவோம்..!