உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் சீவலப்பேரியான் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

கடையம் சீவலப்பேரியான் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

ஆழ்வார்குறிச்சி: கடையம் சீவலபேரியான் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கடையத்தில் தென்காசி - அம்பாசமுத்திரம் மெயின் ரோட்டில் சீவலபேரியான் சுடலை கோயில் உள்ளது.கோயிலில் இன்று (1ம்தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலையில் கடையம் பாரதிநகர் பொதுமக்கள், மதன்ஸ் குடும்பத்தினர், டெல்டா பெயின்ட்ஸ் பிரவீன்குமார், கீழக்கடையம் கே.எஸ்.எம்.நடராஜநாடார் சன்ஸ் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, நவகிரக பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. மாலை தீர்த்த சங்கிரகணம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், யஜமான, ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், யாத்ரா ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 9மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்த சமர்ப்பணம் நடந்தது. இன்று (1ம்தேதி) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், யாத்ரா தானம் ஆகிய வைபவங்கள் நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சீவலபேரியான் சுடலை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை நெட்டூர் ராமநாதகுருக்கள் நடத்துகிறார். காலை 11மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், விசேஷ அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !