உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்

சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்

ஆழ்வார்குறிச்சி: கடையம் சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கடையத்திலிருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் சூட்சமுடையார் சாஸ்தா கோயில் உள்ளது.கோயிலில் நேற்று முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலை 9 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யா வாஜனம், வேதிகார்ச்சனை, 1008 சங்காபிஷேகம், மகா கணபதி ஹோமம், அஸ்த்திர ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. விநாயகர், சாஸ்தா, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11.40 மணியளவில் கடம் புறப்பட்டு விமானம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகளும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. 1008 சங்குகளை சிவ வடிவில் அமைத்திருந்தது மிகவும் விசேஷமாக இருந்தது. விழாவில் சாஸ்தா கோயில் வரிதாரர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர். வருஷாபிஷேகத்தின் போது விமானத்திற்கு மேலே இரண்டு கருடன்கள் 3 முறை வலம் வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். ஏற்பாடுகளை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் தங்கராஜா, பொருளாளர் அருணாசலம், துணை தலைவர் ராமசாமி, துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !