உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நங்கையம்மன் கோயில் கொடை விழா கோலாகலம்

நங்கையம்மன் கோயில் கொடை விழா கோலாகலம்

தென்காசி: தென்காசி அரசூர் நங்கையம்மன் கோயில் கொடை விழா மூன்று நாட்கள் நடந்தது. தென்காசி எல்.ஆர்.எஸ்.பாளையம் அரசூர் நங்கையம்மன் கோயில் கொடை விழாவின் முதல் நாள் இரவு அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்கார தீபாராதனை, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் மதியம் அபிஷேக, தீபாராதனை, இரவு அம்பாளுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள் காலை பால் குடம் ஊர்வலம், மதியம் அம்பாள் பட்டு ஊர்வலமாக எடுத்து வருதல், அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பொங்கலிடுதல், இரவு அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை, அம்பாளுக்கு திருமாங்கல்யம் ஊர்வலமாக எடுத்து வருதல், நள்ளிரவு அம்பாள் வீதி உலா வருதல் மற்றும் அமுது பொங்கும் பால் ஊர்வலமாக சப்பரத்துடன் எடுத்து வருதல் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !