சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :1 days ago
அன்னூர்: குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற, 25ம் தேதி காலை 7:00 மணிக்கு பிள்ளையார் வழிபாடுடன் துவங்குகிறது. மதியம் கோவிலுக்கு தீர்த்த குடங்கள் எடுத்து வருதலும், மாலையில் முதற்கால வேள்வி பூஜையும் நடைபெறுகிறது.
26ம் தேதி காலை 10:00 மணிக்கு விமான கலசங்கள் நிறுவப்படுகிறது. மதியம் தெய்வத் திருமேனிகளுக்கு, எண் வகை மருந்து சாற்றப்படுகிறது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்குகின்றனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் செல்வக்குமார், அறங்காவலர்கள், செயல் அலுவலர் சபரிஸ்வரி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின் றனர்.