உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத சிவராத்திரி சிறப்பு வழிபாடு

ஆடி மாத சிவராத்திரி சிறப்பு வழிபாடு

விழுப்புரம்:  விழுப்புரம் சங்கர மடத்தில் ஆடி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு சிவ வழிபாடு நடந்தது.

விழுப்புரம் காஞ்சி பெரியவர் அவதார ஸ்தலமான சங்கர மடத்தில், தெய்வத்தமிழ்ச் சங்கம் சார்பில், ஆடி மாத சிவராத்திரி முன்னிட்டு சிவபூஜை நடந்தது.

சைவ திருமடத்தின் குருவான குமாரசாமி தேசிக ஆச்சாரியார் தலைமையில் சிவனடியார்கள் 50 பேர் பங்கேற்று சிவபூஜையை செய்தனர். சங்கர மடத்தின் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

தொடர்ந்து கடலுார் அடுத்த விளாத்திப்பட்டைச் சேர்ந்த வைத்தியநாதன் சுவாமியின் திருப்புகழ் இன்னிசை சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நகர தலைவர் சரவணன், சுப்பிரமணியன், பாபு, கார்த்திகேயன் உள்ளிட்டோர் சிவ பூஜை வழிபாட்டினை மேற்கொண்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !