கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :4628 days ago
புதுச்சேரி : கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை பிப்.1 நடந்தது. லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் நாகாத்தமன் கோவிலில் திருவிளக்கு பூஜை பிப்.1, மாலை 6 மணிக்கு துவங்கி 8 மணிவரை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாகாத்தம்மன் முன்பு பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.