உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி விழா

சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி விழா

புதுச்சேரி : சேஷாத்திரி சுவாமிகளின் 143வது ஜெயந்தி விழாவையொட்டி சேஷா ஆசிரமத்தில் விசேஷ பூஜைகள் நடந்தது. எடையார்பாளையம் நாணமேட்டில் சேஷா ஆசிரமம் உள்ளது. இங்கு சேஷாத்திரி சுவாமிகளின் 143வது ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி சேஷாத்திரி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, பஞ்சகவ்ய பூஜையும், வேதிகா பூஜையும் நடந்தது. 108 சங்கு பூஜையும், விசேஷ ஹோமங்களும் நடத்தப்பட்டது. மாலை சிவலிங்க வடிவில் 108 சங்காபிஷேகமும், விசேஷ புஷ்ப அலங்காரமும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குருஜி முத்து குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !