பகவத் கீதை இலவச வகுப்பு
கோவை:சமஸ்கிருத பாரதி சார்பில், பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் வகுப்பு, கோவையில் வரும் 3ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.சமஸ்கிருத பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: பகவத் கீதை மற்றும் சமஸ்கிருத இலவச வகுப்பு கோவையில் நான்கு இடங்களில் நடக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புரந்தரதாசர் கலையரங்கம், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் அருகில் உள்ள சாய்பாபா வித்யாலயம் பள்ளி வளாகம், ராமநாதபுரத்தில் உள்ள கே.ஜி., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம் மற்றும் வடவள்ளியில் உள்ள குழந்தை
கள் பள்ளி வளாகத்தில் நடக்கும் இவ்வகுப்பு, 4.2.2013 துவங்குகிறது. வரும் 12ம் தேதி வரை, தினமும் மாலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை, நடக்கும் இவ்வகுப்பில், வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம்; முன்பே சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
மேலும் விபரங்களுக்கு, 94433 94367, 94433 94368, 94433 94369 என்ற மொபைல் எண்களில்தொடர்பு கொள்ளலாம்.