பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம்
ADDED :4628 days ago
புதுச்சேரி : பஞ்சவடீ, ஆஞ்ஜநேய சுவாமிக்கு 3.2.2013 அன்று பால் அபிஷேகம் நடக்கிறது. திண்டிவனம்புதுச்சேரி நெடுஞ்சாலையில், பஞ்சவடீயில், விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆஞ்ஜநேயருக்கு ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிற்றுக் கிழமை பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான, 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு, பால், பன்னீர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், இணைச் செயலாளர் திருமலை செய்துள்ளனர்.