உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயில் முக்கிய வீதிகளில் குவியும் திருவிழாக்கால குப்பை

பழநிகோயில் முக்கிய வீதிகளில் குவியும் திருவிழாக்கால குப்பை

பழநி : பழநியில் தைப்பூசத்திருவிழா முன்னிட்டு, ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பழநிகோயிலுக்கு செல்லும் முக்கிய வீதிகளில் ஏராளமான குப்பை அள்ளப்படாமல் உள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் முக்கிய வீதிகளான, இடும்பன்கோயில் ரோடு, பூங்காரோடு, அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதி, காந்திரோடு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டீ கப், மற்றும் பாலிதீன் உணவுப்பொட்டலங்ககள், காகிதங்கள் என ஏராளமான குப்பை குவியலாக காணப்படுகிறது.
பழநி சுற்றுலா பஸ் ஸ்டாண்டிலும் குப்பை அள்ளப்படவில்லை. இதன்காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் ஏராளமாக வந்து செல்கின்ற வீதிகளில் குவிந்துள்ள குப்பையை அள்ள நகராட்சி,தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !