திருக்கோஷ்டியூரில் ஆடித் தேரோட்டம்
ADDED :1 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு ஆடித் தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருவாடிப்பூர உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஆக.6ல் கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது.
தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள், பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
நேற்று காலை 7:16 மணி அளவில் ஆண்டாள்,பெருமாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 4:40 மணி அளவில் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. இன்று காலையில் தீர்த்தவாரி, இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.